Language :English
Facebook Blogspot Youtube Twitter
Energy Vastu

தேவையான பொருட்கள்

  • பசுஞ் சாண வரட்டி
  • பசு நெய்
Energy Vastu

அக்னி ஹோத்ரா

(சுற்றுச் சூழலை சுத்தப் படுத்த பண்டைக் காலத்திய சூட்சும வழிமுறை)

நீர், நிலம், நெருப்பு, காற்று & ஆகாயம் பஞ்ச பூதங்கள் எனப்படும். நம் உடம்பும் கூட பஞ்ச பூத சக்திகளின் இயக்கம் தான். இதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும், நம் உடம்புக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு புலப்படும். மேலும் மனித மனங்களை சுத்தப் படுத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்ப்பட்டுள்ளது

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய , பல்வேறு வழி முறைகள் இருந்தாலும் அனைவரும் கடைபிடிக்கக் கூடிய பாதுகாப்பான, செலவில்லாத ஒரு வழியே அக்னி ஹோத்ரம் எனும் எளிய வேள்வியாகும்

செய்முறை

சூரிய உதயத்தின் போதுகாய்ந்த பசுஞ் சாண வரட்டியை எளிதில் காற்று புகும் படி நடுவில் இடம் விட்டு அடுக்கி வைத்து நெருப்பை ஏற்ற வேண்டும். சரியாக சூரிய உதயத்தின் போது பசு நெய் கலந்த அரிசியை மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அக்னியில் போட வேண்டும். இந்த நெருப்பில் இருந்து வரும் வாயுக்கள் காற்று மண்டளதில் பரவி சுற்று சூழலை சுத்தமாக்கும் அறிய பணியை செய்கின்றன

அதிகாலை சூரிய உதயத்தின் போது செய்யும் அக்னியின் சக்தி மாலை சூரியன் மறையும் வரையிலும் மாலையில் செய்யும் வேள்வியின் சக்தி மறுநாள் காலை சூரிய உதயம் வரை நிலைத்திருக்கும்

அதிகாலை உச்சரிக்க வேண்டிய மந்திரம்

ஓம் சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நமம

பிரஜாபதையே ஸ்வாஹா பிரஜாபதையே இதம் நமம

சூரிய அஸ்தமனத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம

பிரஜாபதையே ஸ்வாஹா பிரஜாபதையே இதம் நமம

அக்னி தானாக அணைந்தவுடன் வேள்வியை நிறைவு செய்து விடலாம்

அப்போது சிறிது நெய்யை எடுத்து அவிசுகளின் மேல் ஊற்றி ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்

ம்ருத்யுன்ஞசய மந்திரம்

ஓம் த்ரயம்பஹம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முகஷிய மாம்ருதாத்

இதோடு வேள்வி நிறைவடையும் இந்நேரம் தியான நிலை தானாக உருவாகும் நாடியும் சக்கரங்களும்லும் சரியான கதியில் இயங்கி மேலான பரவசநிலை உண்டாகும் இப்போது நம் கோரிக்கைளை வேள்வியில் வைக்க எண்ணங்கள் ரேடியோ அலை இயக்கம் மூலம் பிரபஞ்சம் முழுமைக்கும் பரவி விரைவில் வேண்டுதல் நிறைவேறும்

வேள்வி முடிந்தவுடன் பாத்திரத்தை அவிசோ டு 3 மணிநேரம் அசைக்காமல் விட்டு விட வேண்டும் இதன் மூலம் காஸ்மிக் எனர்ஜி IFRAY, UVRAY போன்ற பிரபஞ்ச சக்திகள் நுண்ணிய அலை வடிவில் குவிந்து கொண்டே இருக்கும் இந்த சக்திகள் மாசுபட்ட காற்றை சுத்தமாக்குகிறது நோய்களை குணமாக்குகிறது

அக்னி ஹோத்ரா வேள்வி புகையில் எதிலின் ஆக்சைடு ப்ரொப்பிளின் அசெட்டிலீன் மற்றும் ப்யூடா ப்ரோ லேக்டோன் போன்ற உயர் சக்திகள் உருவாவதால்தான் மேற்கூறிய பலன்கள் கிடைக்கிறது என்பதை ஜெர்மானியர்கள் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தார்கள் மாரடைப்பு வரும் வாய்ப்பை தடுக்கிறது என்றும் நிரூபித்திருக்கிறார்கள்

இதன் விஞ்ஞானபூர்வமான பலனை உணர்ந்து கொண்டு உலகெங்கும் சுமார் 1 6 கோடி பேர் அக்னி ஹோத்ரா செய்து வருகிறார்கள் இதுவே அக்னி ஹோத்ராவின் மகத்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது

Energy Vastu